கோவை மாவட்டம் ஆர்.எஸ் புறம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவியானசுபஸ்ரீ. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவையில் உள்ள அகாடமியில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்ததுள்ளார். கடந்த முறை எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்-சில் சேர நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வுகளை நடத்தலாம் எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. கடந்த முறை தோல்வி அடைந்ததால் அடுத்த மாதம் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவோமா, என்பதில் சுபஸ்ரீ குழப்பத்தில் இருந்துள்ளார்.
துவண்டுபோன மனநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவர் கனவோடு இருந்த மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.