ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முதுகலை மருத்துவ தேர்வுகள் ஆகஸ்ட் 24 முதல் தொடங்கும் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழக அரசால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவ கல்வி இயக்ககம் இன்று தேர்வுகள் நடைபெறும் என மீண்டும் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாகத் தமிழக அரசு, கல்லூரிகளில் செமெஸ்டர் தேர்வுகளைக் கடந்த ஜூலை 29ம் தேதி ரத்து செய்வதாக அறிவித்தது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவத் தேர்வுகளோடு பிற கல்லுாரிகளுக்கும் இறுதியாண்டு தவிர்த்து, பிற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளில் இளநிலை மற்றும் முதுகலை படிப்பில் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்குவதற்கான நெறிமுறைகளையும் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. இவற்றைத் தொடர்ந்து இன்று, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் ஆகஸ்ட் 24முதல் மீண்டும் தேர்வுகள் நடைபெறுவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டிருக்கிறது.
ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் முதுகலை மருத்துவர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சி தருவதாகவும், தேர்வுகளைத் தமிழக அரசு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.