கொரோனாவில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பூரண குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் செல்லூர் ராஜூ 8ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனாவை குணப்படுத்துவதற்கான சிகிச்சையை அளிக்க பட்டுவந்தது.
இந்நிலையில் மியாட் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், கொரோனாவில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ பூரண குணமடைந்து விட்டதாகவும், மருத்துவமனையில் இருந்து அவர் தமது வீட்டுக்கு திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.