உலகிலேயே 5ஆவது பணக்காரர் முகேஷ் அம்பானி… சொத்து எவ்வளவு தெரியுமா?

Share

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் காட்டில் அடைமழைதான் என்று சொல்ல வேண்டும். காரணம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமைப் பங்கு வெளியீடு ரிலையன்ஸ் பார்ட்லி பெய்ட் (Reliance Partly Paid) பங்கு விலை நல்ல லாபம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.

ரிலையன்ஸ் பிபி பங்கு கடந்த திங்களன்று பங்குச் சந்தையில் வர்த்தகமாகத் தொடங்கியது. ரூ.684.25-க்கு வர்த்தகமாகத் தொடங்கிய இந்தப் பங்கு விலை, அதிகபட்சமாக ரூ.731 வரை உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது ரூ.713.30-ஆக வர்த்தகமானது. இந்த விலை மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், முகேஷ் அம்பானிக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது.

விளைவு, உலகின் 5 ஆவது மிகப்பெரும் பணக்காரராகி இருக்கிறார் முகேஷ் அம்பானி. உலகளாவிய ஒப்பீட்டின்படி, 74.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துடன் உலகிலேயே 5 வது இடத்தில் முகேஷ் அம்பானி இருப்பதாக பிரபல ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

அயோத்தி: ராமர் கோயில் சாமியார் உட்பட 16 பேருக்குக் கொரோனா

Admin

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30இல் இறுதித் தீர்ப்பு

Admin

உச்சத்தை தொடும் தங்கம் வெள்ளி விலை

Admin

Leave a Comment