தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பின் தொடர்ந்து புதுச்சேரியிலும் சித்த மருத்துவத்தை மேற்கொள்ள அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை முதலமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், தமிழகத்திற்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு, தமிழகத்தில் அளிக்கப்படும் சித்த மருத்துவ முறைகள் குறித்து அறிந்த பின்னர் புதுச்சேரியும் அதனை பின்பற்றுவது என முடிவு எடுக்கப்பட்டது.