சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதல்: பொதுமக்கள் பாதிப்பு

Share

சத்தீஷ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் காயமடைந்தனர்.

பார்செலி என்ற கிராமத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிகுதியாக காணப்படும் நிலையில், சமீபத்தில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் சாலை மற்றும் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதைபிடிக்காத நக்சல்கள் உருட்டுகட்டைகளுடன் கிராமத்துக்குள் நுழைந்து பெண்கள் குழந்தைகள் என அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் 8 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Share

Related posts

குல்காம் பகுதியில் நிலவும் பதற்றம்: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

Admin

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Admin

சரிந்தபங்குகள்6-ம்இடத்தி்ற்கு தள்ளப்பட்ட அம்பானி

Admin

Leave a Comment