பாசம் என்பதோர்… – சிறுகதை

Share

ஆசிரியர்: வீரக்குமார்

அந்த பூங்குன்றம் கிராமத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் நகரமும் அல்லாத கிராமும் அல்லாத நடுத்தரத்தில் ஆவுடையார் கோவிலில் உள்ள அரசு முதியோர் இல்லம் விழா கோலம் பூண்டிருந்தது. வர இருக்கும் பொங்கலை ஒட்டி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் பொங்கல் வைத்து கொண்டாடபட்டது.

இல்லத்தில் உள்ள முதியவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட ஆரம்பித்தபோது, அய்யனார்-சிவகாமி தம்பதிகள் கண்ணில் மட்டும் கண்ணீர் வடிந்தது. கண் இமைகளை விட்டு இறங்கிய கண்ணீர் முகத்தை விட்டு கீழே இறங்கும் முன்னரே இவர்கள் நினைவு சற்று பின்னோக்கி சென்றது.

அய்யனாருக்கு சிவகாமி மாமன் மகளாக இருந்தாலும், வீட்டை எதிர்த்து இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்தவர்கள். அய்யனார் பெரிய வசதி படைத்தவராக இல்லாவிட்டலும் மிகவும் சிரமப்படும் நிலையிலும் இல்லை. இவர்கள் காதலுக்கு பிறந்த மூன்று மகன்களையும் நல்ல நிலைக்கு கொண்டு வருவதே இவர்களது லட்சியமாக இருந்தது. இவர்கள் எண்ணதிற்கு ஏற்றவாரே மகன்களும் திறம்பட படித்தனர். முதல் மகன் செல்வன் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவமும், இரண்டாம் மகன் கலையரசன் கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியிலும் படித்தனர்.

Why rice and milk are overflowed during Pongal celebrations ...


விவசாயம் மட்டுமே செய்த அய்யனாருக்கு விவசாயம் கை கொடுக்காததால் சொத்துகளை விற்று படிக்க வைத்தார். படிப்பை முடித்த முதல் இரு மகன்களுக்கும் படித்த ஊரிலேயே நல்ல வேலை கிடைக்க அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு, பெற்றவர்களுக்கு தகவல் மட்டும் அனுப்பினர். அதன்பின் அவர்கள் அய்யனாரையும்-சிவகாமியையும் பார்த்துகொள்ள முடியாது என கூறி முதியோர் இல்லதில் விட்டு சென்ற சம்பவங்களை நினைத்து கண்களை துடைத்த போது அந்த மூன்றாவது மகன் நினைவு வர, இல்லத்தின் நிர்வாகி சத்தமாக எல்லோரையும் அழைத்தார்.

மாவட்ட ஆட்சியர் நமது இல்லத்தை பார்வையிடவும் பொங்கல் வாழ்த்து கூறவும் வர உள்ளார் என தெரிவித்த போது அங்கே ஒரே சலசலப்பு. மாவட்ட ஆட்சியர் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்று மாறி மாறி பேசிக்கொள்ள, ஆட்சியர் வாகனம் வந்து நின்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இளம் மாவட்ட ஆட்சியர் தமிழ்யாழினி ஒரு திருநங்கை, இல்லத்தை பார்வையிட்ட அவர் ஒவ்வொருவர் அருகிலும் சென்று நலம் விசாரித்த போது அய்யனார்-சிவகாமி அருகே சென்றவுடன் வார்த்தைகள் ஏதும் இன்று அவர்கள் கால்களில் விழுந்து அழ தொடங்கினார்.

ஒன்றும் புரியாமல் அனைவரும் இருக்க, நான் தான் உங்கள் மூன்றாவது மகன் தமிழரசன் என மாவட்ட ஆட்சியர் கதர, சிவகாமியும்-அய்யனாரும் பள்ளி பருவத்தில் சற்று வித்தியாசமாக நடந்து கொண்ட தமிழரசனை, தினமும் திட்டியதும், கடிதம் எழுதி வைத்து வீடை விட்டு அவன் வெளியேறியதையும் நினைத்து மனம் குறுகி நின்றனர்.


Share

Related posts

இந்தியாவின் முதல் விவசாயிகள் ரயில்: மகாராஷ்டிரா – பீகார் இடையே தொடக்கம்

Admin

நாளை இலங்கையில் பொதுத்தேர்தல்…

Admin

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Admin

Leave a Comment