இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என பொது மக்களுக்கான கூகுள் அலர்ட் முதலில் தெரிவித்தது. ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமார் 300கி. மீட்டர் தொலைவிற்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் இன்னும் வெளியாகவில்லை
previous post