இரண்டு நாளாக நடிகர் ரஜினி காந்த்தின் கார் பயணம் தான் பிரதான பேசுபொருளாக இருந்தது. சமூக வலைதளங்களிலும் அதுதான் பேச்சு.
ரஜினி கார் ஓட்டியது. குடும்பத்தைச் சந்தித்ததெல்லாம் செய்திகள் என்று ஊடகங்கள் எழுதின. வெற்றுச் செய்தி ஓட்டிக்கொண்டிருந்த வேளையில், இ-பாஸ் வாங்கிக்கொண்டு சென்றாரா என்ற கேள்வி வெற்றுச் செய்திகளை விவாதமாக மாற்றியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி, அவர் இ-பாஸ் வாங்கிக்கொண்டுதான் சென்றாரென்று அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. அத்துடன் ஒரு இ-பாஸும் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த இ-பாஸை கவனித்தால் ஒரு உண்மை விளங்கும். அந்த இ – பாஸ் ரஜினி வாங்கியதுதான். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தன் மகள் வீட்டுக்குச் செல்வதற்காக வாங்கியதுதான்.
ஆனால், அவர் தனது டிரைவருடன் பயணித்த அந்த தேதிக்கு (21.07.2020) வாங்கியது அல்ல. சர்ச்சை வெடித்த பிறகு, அவசர அவசரமாக நேற்று விண்ணப்பிக்கப்பட்டு இன்றைய தேதிக்கு (23.07.2020) வாங்கப்பட்ட இ-பாஸாக இருக்கிறது.
ரஜினிகாந்த் இபாஸ் வாங்கினாரா?: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில்
அப்படியென்றால், ரஜினி இ-பாஸ் வாங்காமல்தான் அந்த தேதியில் பயணித்துள்ளார் என்ற சந்தேகம் மேலும் மேலும் வலுப்படுகிறது. மேலே உள்ள படத்தில் மஞ்சள் நிறத்தால் குறிக்கப்பட்டிருக்கும் தேதியை கவனியுங்கள்.
இதனை இல்லை என்று நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்காமல் பயணித்திருக்கிறார் என்பது நிரூபணமாகிறது.
ஒரு தனிமனிதன் இ-பாஸ் வாங்காமல் பயணிப்பது என்பது இவ்வளவு பெரும் விவகாரம் அல்ல. ஆனால், தனக்கு இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தற்கொலைகள் நடக்கும் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்க முடிகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பென் பாய்ண்ட் குழுமத்துக்கு உள்ளது.
இது தொடர்பான வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.