சிறிய வழிபாட்டு தலங்களை மாநகராட்சி பகுதிகளில் ஆகஸ்ட் 10 முதல் திறக்க அனுமதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 4 மாதங்களாக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரும்பாலும் கூடும் இடங்களான மால்கள், கோயில்கள் போன்றன மூடப்பட்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து இன்று, மாநகராட்சி இயக்குநர்களிடமும் மாவட்ட ஆணையர்களிடமும் அனுமதி பெறும், ரூ.10 ஆயிரத்திற்கும் வருமானம் குறைவாக உள்ள வழிபாட்டு தலங்களை ஆகஸ்ட் 10ம் தேதி முதல் திறக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் ஆகஸ்ட் 10 முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று அவரது அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.