கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்ட 26 பேரில் 24 பேர் பூரணமாகக் குணமடைந்து உள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி வரும் திங்கட்கிழமை (நாளை) முதல் செயல்பட உள்ளது. எனவே, கொரோனா பாதிப்பால் பூரண குணமடைந்தோர் பிளாஸ்மா தானம் செய்ய தாமாக முன்வர வேண்டும். சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.