தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,73, 460 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 5ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தமிழகத்தில் சுமார் 77.80% பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.