பிரதமர் நரேந்திரமோடி இன்று பேசியது என்ன… தமிழில்

Share

74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றி இந்தியப் பிரதமர் உரையாற்றினார். உரையை நேரலையாக இங்கு படிக்கலாம். 

7 ஆவது முறையாக செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றிவிட்டு உரையாற்றத் தொடங்கினார். 

* இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். 

* சுதந்திர தினம் என்பது நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் நாளாகும். இந்த நாளில் நாம் அனைவரும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். 

* இன்று என் முன் குழந்தைகள் இல்லை. கொரோனா அனைவரையும் நிறுத்தியுள்ளது. அதே போல, இந்த சமயத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராடுவோருக்கும் நான் தலைவணங்குகிறேன்

* அவர்கள் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ,சுதந்திர தினக் கொண்டாட்டம் மக்களுக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது. 

* இந்தியா அனைத்துப் பிரச்சினகளையும் ஒற்றுமையாக எதிர்க்கிறது. மழை, வெள்ளம், கொரோனா என அனைத்துப் பேரிடர்களையும் இந்தியா சந்தித்துள்ளது. 

* 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்னும் பிரம்மாண்டமானதாக இருக்கும். 

* பன்முகத்தன்மையே நமது பலம். பன்முகத்தன்மை கொண்ட நம்மை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். இந்தியாவை தொடர்ந்து ஆளலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

* இந்தியாவின் ஒற்றுமைதான் உலகுக்கு பாடம். தற்போது இந்தியா சுயசார்பு இந்தியாவாக மாறிக்கொண்டிருக்கிறது. நான் உறுதியாகச் சொல்கிறேன் இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும். 

* இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்பதுதான் தற்போது ஒவ்வொரு இந்தியருக்கும் தாரக மந்திரம். உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும். இந்தியா தன்னிறைவு பெற்றால்தான் பிற நாடுகளுக்கு உதவ முடியும். 

* அதேபோல கொரோனாவுக்கு எதிரான போரிலும் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்.

* நம்மிடையே நிறைய சவால்கள் இருந்தன. அவற்றைத் தாண்டி தாண்டி வெல்லும் சக்தி நம்மிடம் உள்ளது. குறிப்பாக, முன்பு நம்மிடம் வெண்டிலேட்டர்கள் இல்லை. தற்போது அவற்றை நாமே தயாரிக்கிறோம். 

*இவ்வாறாக விவசாயக் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும். சுகாதாரக் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும். அது மிக மிக அடிப்படையானது. விவசாயிகளைன் செலவுகளைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயத் தயாரிப்புகளை பன்னாட்டு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

*வங்கித்துறை முதல் விண்வெளித்துறை வரை பல புதுமைகளைப் புகுத்தியுள்ளோம். இப்படியே உலகை வழிநடத்தும் அளவுக்கு இந்தியா முன்னேற வேண்டும். 

* இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் கவனிக்கின்றன. இனி உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவளிப்போம். 

* ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே வரி என பல வழிகளில் நாம் முன்னேறுகிறோம். இனி உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

* இந்தியாவின் அனைத்துப் பொதுப்போக்குவரத்தும் ஒருங்கிணைக்கப்படும். (நாடு முழுக்க இருக்கும் பொதுபோக்குவரத்தை இணைக்கும் புதிய திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார்)

* ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் மக்களுக்கு குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. 

* புதிய கல்விக்கொள்கை மூலம் இந்திய மாணவர்கள் உலகக் குடிமக்களாக உருவாக வாய்ப்புள்ளது. நம் மாணவர்களுக்கு புதிய கல்விக்கொள்கை சிறந்த புதிய ஊக்கத்தை அளித்துள்ளது.

* இணைய வழி வர்த்தகம் பன்மடங்கு வளர்ந்துள்ளது. பீம் செயலி மூலம் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 

* கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் இந்தியாவின் 1.5 லட்சம் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த 1000 நாட்களில் 6 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும். லட்சத்தீவுகளில் அதிவேக இணைய சேவை ஏற்படுத்தப்படும். 

* பெண்களுக்கு முன்னுரிமை தர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முப்படைகளிலும் பெண்கள் நிரந்தரமாகப் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டம் மூலம் 22 லட்சம் பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

* தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் விரைவில் தொடங்கப்படும். ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அட்டை வழங்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். 

* நாள்தோறும் சராசரியாக 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். சோதனைகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. 

* காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும். காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது வளர்ச்சியின் பலன்களை காஷ்மீர் அனுபவித்து வருகிறது. தற்போது தொகுதி மறுவரையறை பணிகள் நீதிமன்ற அறிவுரையின்படி நடைபெற்று வருகின்றன. 

*டால்பின்களைப் பாதுகாக்க புதிய திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். 

* இந்தியாவுக்கு எதிராக எதிரி நாடுகள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க கடுமையாகப் பணியாற்ற வேண்டும். 

* நம் எல்லைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வெற்றிக்கு தைரியத்துடன் போராடிய வீரர்களே முக்கியக் காரணம். 

* புதிய எல்லைக் கட்டுமானங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கடலோர எல்லைகளும் கவனிக்கப்படுகின்றன. 

* ராமஜென்மபூமி விவகாரம் அமைதியாக முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. நாம் தொடர்ந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் செயல்பட வேண்டும் என்பதே இந்த நாளில் எனது வேண்டுகோள். 

ஜெய்ஹிந்த்… வந்தே மாதரம் 


Share

Related posts

சென்னையில் உள்ள காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளை கண்காணிக்க குழு அமைப்பு

Admin

காங்கிரஸுக்கு இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக வேண்டும்: பிரியங்கா காந்தி

Admin

பாசம் என்பதோர்… – சிறுகதை

Admin

Leave a Comment