லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் 34 ஆவது முறையாக சாம்பியன்: பார்சிலோனா ஏமாற்றம்

Share

 ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடர் கொரோனா காரணமாக   மார்ச் 9ம் தேதியுடன் இடைநிறுத்தப்பட்டது. இந்த தொடர், கடந்த ஜூன் 12ம் தேதி மீண்டும் தொடங்கியது. அப்போதுபுள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பார்சிலோனா அணியை, பின்னுக்கு தள்ளி ரியல் மாட்ரிட் முதல் இடத்துக்கு  சென்றது. 

கொரோனாவுக்கு பிறகு  ரியல் மாட்ரிட் ஆடிய 9 ஆட்டங்களில் ஒன்றில் கூட அந்த அணி தோல்வியை சந்திக்கவில்லை. அதனால்  ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வாய்ப்பில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தியதை அடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது உறுதியானது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் ரியல் மாட்ரிட் அணி 86 புள்ளிகளும், பார்சிலோனா 79 புள்ளிகளும் பெற்றுள்ளன. இதனால், ரியல் மாட்ரிட் அணி 34வது முறையாக லா லிகா கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது.


Share

Related posts

மூடப்பட்டது சேலம் ஆட்சியர் அலுவலக வளாகம்

Admin

மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரதமர் பொய் கூறுகிறார்: ராகுல் காந்தி கண்டனம்

Admin

12 அரசு கட்டிடத்தை தகர்த்த மாவோயிஸ்ட்கள்…

Admin

Leave a Comment