இசை புயலுக்கு ஆதரவு அளிக்கும் எஸ்.பி.வேலுமணி

Share

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாலிவுட் திரைப்படம் ஒன்று வெளியானதில் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஹ்மான், பாலிவுட்டில் தான் வேலை செய்ய கூடாது என்று சிலர் நினைப்பதாகவும், எனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

தற்போது வெளியான படத்தின் இயக்குநரிடம் கூட ரஹ்மானிடம் சென்றால் பாடல் இசையமைத்து தர நீண்ட நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்கள். எனக்கு இறைவன் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் ரகுமான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இசைபுயல் ஏ.ஆர்.ராகுமானுக்கு தனது முழு ஆதரவை அளிப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தில்.

தனது பதிவில், பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது, எனவும்,

எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். ரகுமானுக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

விநாயகர் சதுர்திக்கு ஆன்லைனில் விண்ணப்பம்: பிஎம்சி அறிவிப்பு

Admin

இப்போதைக்கு இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை..

Admin

அமைதியை நிலைநாட்ட நான் தயார்:டிரம்ப்

Admin

Leave a Comment