சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் உள்ள பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியு இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகம் மூடப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை (13-ம் தேதி) மீண்டும் அலுவலகம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.