உச்சத்தை தொடும் தங்கம் வெள்ளி விலை

Share

கடந்த சில மாதங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இமய உச்சத்தை அடைந்து வருகிறது. நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வெள்ளி விலை உயர்வால் கடும் அதிர்ப்தியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் நேற்று ரூ. 4,923 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.7 அதிகரித்து ரூ.4,930 ஆகவும் ஒரு சவரனுக்கு நேற்றைய விலையான ரூ.39,384 இருந்து ரூ.56 அதிகரித்து ரூ. 39,440 ஆக உள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7 அதிகரித்து ரூ.4,696 ஆகவும், சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.37,568 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளியின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.1 அதிகரித்து கிராம் ஒன்று ரூ.56-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ.56000-க்கும் விற்பனை செய்யபடுகிறது.


Share

Related posts

கொரோனாவில் இருந்து ஒரு கோடி பேர் குணம்

Admin

இந்திய-பாக் எல்லையில் மீண்டும் வெட்டுக்கிளி கூட்டம் வரும் – ஐ.நா. எச்சரிக்கை

Admin

தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்

Admin

Leave a Comment