ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: டிரம்ப் பெருமிதம்

Share

ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 17 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் இதனை சூப்பர் டூப்பர் ஏவுகணை எனக்கூறி பெருமிதம் அடைந்துள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் உலகில் தலைசிறந்த ஏவுகணைகள் உள்ளன. இதில் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு நன்றாக இயங்குகிறது என்பதை பென்டகன் நிர்வாகிகள் அறிவித்தனர். ஹைபர்சோனிக் ஏவுகணை தொழில் நுட்பத்தில் ரஷ்யாவும் சீனாவும் முன்னோடிகளாக விளங்குகின்றன. தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைபர்சோனிக் ஏவுகணையை போன்று வடகொரியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தயாரித்துவிட்டன. இவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிநவீன ஏவுகணையை 2023ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்திருந்தார்.இந்த ஏவுகணை மணிக்கு 3,800 மைல் வேகத்தில் பயணிக்கும். மேலும் இந்த ஏவுகணையின் பாதையினை கணிப்பது மிகக் கடினம். அமெரிக்காவில் 2023ஆம் ஆண்டுக்குள் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை அதன் தளத்தில் நிறுவப்படும் என கூறப்படுகிறது.


Share

Related posts

உள்நாட்டு நுண்செயலிகளைக் கொண்டு புதிய கருவிகளை உருவாக்கினால் ரூ. 4.3 கோடி பரிசு: மத்திய அரசுஅறிவிப்பு

Admin

ஃபேஸ்புக் அவ்வளவு முக்கியம்னா வேலைய ராஜினாமா பண்ணுங்க: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Admin

உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சவால்

Admin

Leave a Comment