நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான சூர்யா, தன் தனித் திறமையால் சிறந்த நடிகராக உயர்ந்துள்ளார். நந்தா, மௌனம் பேசியதே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், சிங்கம், அயன் என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ள சூர்யா இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
சூர்யாவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் #HappyBirthdaySuriya என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி சூரரைப்போற்று படக்குழு ‘காட்டுப்பயலே’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளது.
தனது பிறந்தநாளை ஒட்டி இன்ஸ்டாகிராமில் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.