மீண்டும் களமிறங்கும் சீரியல்கள்… எந்தெந்த சேனல்களில் தெரியுமா?

Share

சீரியல் மறுபடியும் வருதாம் கலர்ஸ் தமிழ் வெளியிட்ட அறிவிப்பு…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருக்கு. ரிலீஸுக்கு ரெடியா உள்ள பல படங்களை வெளியாக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இதே நிலமைதான் டிவிக்களுக்கும் .சீரியல்களின் புதிய எபிசோடுகளை ஒளிபரப்ப முடியாமல் சேனல்களும் திணறி வருகின்றனர். கடந்த 3 மாதமாக பழைய எபிசோடுகளையே ஒளிபரப்பித்தான் சமாளித்து வந்தனர்.

கடந்த மாதம்சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது ஆனால் ஒரு வாரம் மட்டும் தான் படப்பிடிப்பு நடத்த முடிந்தது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு முடிந்து கடந்த 8 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆனால், சன் டிவி ஏற்கெனவே ஒளிபரப்பி வந்த 4 தொடர்களை நிறுத்தி விட்டு புதிதாக 5 தொடர்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. அதே மாதிரி 25 எபிசோடுகள் கைவசம் இருந்தால் தான் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பப்படும் என ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழ் சேனலும் வரும் 20 ஆம் தேதி முதல் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளது. அத்யன்படி ஓவியா 7.30 மணிக்கும், அம்மன் இரவு 8 மணிக்கும், இரவு 8.30 மணிக்கு இதயத்தை திருடாதே தொடரும் இரவு 9.00 மணிக்கு மாங்கல்ய தோஷம் , 9.30 மணிக்கு உயிரே மற்றும் 10 மணிக்கு திருமணம் ஆகிய தொடர்களின் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்புறம் என்ன? கலர்ஸ் தமிழ் நேயர்களே.. இந்த கொரோனா ஊரடங்கில் புதிய தொடர்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க..


Share

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- உயர்நீதி மன்றம்

Admin

சரிந்தபங்குகள்6-ம்இடத்தி்ற்கு தள்ளப்பட்ட அம்பானி

Admin

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் வந்தாச்சு முதல் பிளாஸ்மா வங்கி…

Admin

Leave a Comment