தமிழகத்தில் நான்கு புதிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம், சுமாா் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும். தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நான்கு முக்கிய தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களைத் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. நான்கு நிறுவனங்களும் மொத்தமாக ரூ.2,500 கோடி அளவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதலீடுகளைச் செய்யவுள்ளன.
இந்த முதலீடுகள் காரணமாக சுமாா் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நான்கு புதிய நிறுவனங்களின் முதலீடுகளால் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.