தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பீகார், உத்திரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 9 ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதையடுத்து 2 ஆயிரத்து 678 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மாநிலம் முழுவதும் 649 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 21 மாவட்டங்களைச் சேர்ந்த 47,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கால் துப்ரி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டிவிட்ட நிலையில் கனமழை நீட்டித்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தலைநகர் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களாக பீகார், அரியானாவில் கனமழை பெய்து வருகிறது. இதனைபோல், இமாச்சலப் பிரதேசத்தில் இன்று மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
