ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் ஈட்டி சாதனை படைத்துள்ளது,அமேசான்நிறுவனம். கொரோனா நோய் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் அதிகமாகியுள்ளது.இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்ணணி நிறுவனமாக இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெப்பெசோஸின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 74 பில்லியன் டாலராக இருந்த ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு, தற்போது 189.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் அமெரிக்க பொருளாதாரமே சரிந்து வரும் நிலையில் அமேசான் நிறுவனத்தின் வருமானம் அமோகமாக உயர்ந்து வருகிறது.