சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு: விசாரணையை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

Share

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து, சாலை திட்ட இயக்குனர் மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் கடந்த மே மாதம் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற திட்ட அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று அருண்மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து, எதிர் மனுதாரர் மனுவை ஒத்திவைக்கும்படி வாதாடியதன் அடிப்படையில், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது


Share

Related posts

இடத்தை அகற்றிய வருவாய் அலுவலர்: போராட்டம் நடத்தும் பசு

Admin

டேய் பாலு.எழுந்து வாடா..: கண் கலங்கிய இயக்குநர் பாரதிராஜா

Admin

சுவர் ஏறி குதித்து பரோட்டா வாங்க போன கொரோனா நோயாளி

Admin

Leave a Comment