மாஸ்க் போட்டு நாட்டுப்பற்றை நிரூபித்த ட்ரம்ப்

Share

உலகம் முழுக்க கொரோனாவைரஸ் பாதிப்பு பெருகி வரும் நிலையில், அமெரிக்காதானுலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு. ஆனால், அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும் இதுவரை மாஸ்க் அணியாமல் இருந்த் வந்தார்.

இதனையிட்டு, நாடு மொத்தமும் மாஸ்க் அணிந்து ஒற்றுமமையாகக் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் நிலையில், ட்ரம்ப் மட்டும் இப்படி செய்வது நியாமில்லை என்றும் அவருக்கு நாட்டுப்பற்றே இல்லை என்றும் சமூக வலைதளங்கள் பேசத்தொடங்கின.

இந்நிலையில், தான் மாஸ்க்குடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப். அதனுடன், “கண்ணுக்குத் தெரியாத சீன வைரஸைத் தோற்கடிப்பதற்கான நம் முயற்சியில் அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மேலும், ஒருவருக்கொருவர் தனிநபர் இடைவெளியையும் கடைப்பிடிக்க முடியாதபோது முகமூடி அணிவதுதான் தேசபக்தி என்று பலர் கூறுகிறார்கள். என்னை விட தேசபக்தி மிகுந்தவர் யாரும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

ஃபோர்ட் நைட் கேம் நீக்கம்..

Admin

அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம்…

Admin

ஈரான் தளபதி குறித்து சொன்னவருக்கு தூக்கு தண்டனை

Admin

Leave a Comment