தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19ம் தேதி தமிழக அரசு அறிவித்த ஊரடங்கில் ஜூலை மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் ஜூலை மாதத்தில் 5,12,19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஊரடங்கின் போது வாகனங்களில் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளது
இரவு முதலே முக்கிய சாலைகள் தடுப்புகள் போடப்பட்டு மூடப்பட்டு விடும். திங்கட்கிழமை காலை 6 மணிக்கு இந்த ஊரடங்கு தளர்த்தப்படும்.