இந்தியா – சீனா இடையே லடாக் எல்லை பிரச்னையில், கடந்த சில வாரமாக நீடித்து வரும் நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், சீனாவுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்கானி செய்தியாளர் கூட்டத்தில், இந்திய மக்களை நேசிக்கிறேன், சீன மக்களையும் நேசிக்கிறேன், மக்களுக்கு அமைதியை நிலைநாட்ட எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன்’ என டிரம்ப் கூறியதாக தெரிவித்தார்.

இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையே எல்லை பிரச்சனையில் சமாதானம் செய்ய டிரம்ப் விரும்புவது தெரிகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் விஷயத்திலும் இதுபோன்ற கருத்தை டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.