ஐக்கிய அரபு நாடுகளின் சார்பில் செவ்வாய்கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் வகையில் விண்கலம் ஒன்றை தயார் செய்திருந்தது. இந்த விண்கலம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுப்பாதை மற்றும் வலிமண்டலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கிறது.
இதற்காக ஜப்பான் நாட்டின் தானேகாஷிமாவில் உள்ள விண்வெளி மையம் மூலம் செலுத்த ஏற்பாடு நடைபெற்றுவந்தது. விண்ணில் செலுத்துவதற்கு ஏற்கனவே 2 முறை தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது ஜப்பானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இந்த முறையும் விண்கலம் ஏவுவது வரும் 22 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.