தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த தடை.

Share

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்த அரசு தடை விதித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப் பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டுவர அனுமதி கிடையாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வருடாவருடம் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சாலைகள், தெருக்கள் என மக்கள் நடமாடும் இடங்களில் வைக்கப்படும் பெரிய விநாயகர் சிலைகள், அடுத்த சில நாட்களில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு அவ்விடங்களில் இருக்கும் நீர்நிலையில் கரைக்கப்படுவது வழக்கம். இவ்வாண்டும் அத்தகைய ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நிலைமையில் ஊர்வலங்கள் ஏதும் நடத்தாமல் மக்கள் இல்லங்களிலிருந்தே வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Share

Related posts

சதுரகிரியில் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு அனுமதி இல்லை

Admin

இன்று மாலை தொடங்கும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு

Admin

திமுக பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் யார் யார்?

Admin

Leave a Comment