சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஹீரோ. இதனை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் டாக்டர் படத்தின்முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. செல்லம்மா என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.பாடல் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது,#Chellamma என்ற ஹேஷ்டேக்கை இடம்பெறச் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் ,சிவகார்த்திகேயனின் ரசிகர்கள். .

குறிப்பாக டிக் டாக் தடை பண்ணியதை குறித்து அந்த பாடல் காதல் பாடலாக மாறி இளைஞர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது