டிக்டாக் உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்கள் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளதாக கூறி மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தடை செய்யப்பட்ட சீன ஆப்கள் சில வெப்சைட்கள் மூலம் இயங்குவதாகவும், முழுமையாக இவை தடை செய்யப்படவில்லை எனவும் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
தடை செய்யப்பட்ட ஆப்கள் இப்படி வெப்சைட்கள் மூலம் இயங்குவது, இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தலான விஷயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.