நமக்கே இப்படின்னா ஏழைகள் என்ன பண்ணுவாங்க?

Share

சூரத்தை சேர்ந்த 63 வயதான காதர் ஷைக், கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அவர் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது செலவுக்காக பல லட்சங்களை மருத்துவமனை நிர்வாகத்திற்கு செலுத்தியுள்ளார்.
வருமானம் வரக்கூடிய நமக்கே இந்த நிலை என்றால் ஏழைகள் என்ன செய்வார்கள் என யோசித்த அவர் உடனடியாகசூரத்தின் அடாஜன் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தை 85 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா மருத்துவமனையாக மாற்றி அமைத்து நகர முனிசிபல் அலுவலகத்திற்கும்,தகவல் தெரிவித்துள்ளார்.

நான் பிறக்கும்போதே பணக்காரனாக பிறக்கவில்லை. என் வாழ்வின் ஆரம்ப நாட்களில் நிதி சிக்கலை எதிர்கொண்டேன். அதை களைய கஷ்டப்பட்டு உழைத்தேன். இப்போது எனது தேவைக்கு போதுமான பணம் என்னிடம் உள்ளது. அதனால் உதவி தேவைப்படுகின்ற மக்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் என்னால் முடிந்ததை செய்வதற்காக அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றியுள்ளேன்” என்கிறார் காதர் ஷைக்.


Share

Related posts

கேரளாவின் 4 மாவடங்களுக்கு ரெட் அலாட்

Admin

பிரணாப் முகர்ஜி உடல் நிலை சீராக உள்ளது-அபிஜித் முகர்ஜி தகவல்

Admin

லஞ்சம் கேட்ட ஊழியர்- தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற பேரன்

Admin

Leave a Comment