கொரோனா காலத்தில் இந்த முடிவுகளை யார் எடுக்க சொன்னது?: ப.சிதம்பரம் கேள்வி…

Share

கொரோனா போராட்டதில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததாக கூறிய பிரதமருக்கு முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்’ என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது?

நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு – சரியான முடிவா?

ரயில் இன்றி, பஸ் இன்றி பல இலட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே – சரியான முடிவின் விளைவா?

பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே – இது சரியான முடிவுகளின் பயனா?

ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே – சரியான முடிவுகளின் பயனா?


Share

Related posts

புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் எத்தனை… இன்று வெளியீடு

Admin

கொரோனாவில் இருந்து ஒரு கோடி பேர் குணம்

Admin

தலைநகர் டெல்லியில் பலத்த கனமழை

Admin

Leave a Comment