உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் பெரும்வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,சமோலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையான பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.