முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட அடைப்புக்காக திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டபோது நடத்திய பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. என்றும், ஆனாலும் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் இருப்பதாகவும். அவரது உடல்நிலையை ராணுவ மருத்துவா்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன