ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழிகள் என்றும் பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுக்க இந்தி எதிர்ப்பு பரவியிருந்த நிலையில், மீண்டும் மீண்டும் இந்தியை முதன்மைப்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.