30 வினாடிகளில் கொரோனாவை கண்டுபிடிக்கும் வகையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கிய 4 தொழில்நுட்பங்கள், டெல்லியில் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள், பரிசோதனை அடிப்படையில் 4 தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த 4 தொழில்நுட்பங்களும், டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் பரிசோதனை நடத்த உள்ளதாக பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை வெற்றியானால், புதிய கருவி முன் ஊதினாலோ அல்லது பேசினாலோ மாதிரியை சேகரித்து கொண்டு பரிசோதிக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பமாக இது இருக்கும் என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.