ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இதில் ராமர் கோயிலைக் கட்டும் தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் கோபால் தாஸூம் கலந்து கொண்டார். இந்நிலையில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்துக் கேட்டறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொற்று பாதித்த மகந்த் கோபால் தாஸூக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.