கொரோனா வைரஸ்:இஸ்ரேலுடன் இணையும் இந்தியா

Share

கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கியமானது வேகமான பரிசோதனை முறை. இதனால் தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து, விரைவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் கால தாமதமாகிறது.

இதனால் கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய நவீன கருவியை உருவாக்குவதில் டி.ஆர்.டி.ஓ. முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளில் இஸ்ரேலிய நிபுணர் குழுவுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர்.இதற்காக இஸ்ரேலிய உயர்மட்ட நிபுணர் குழு ஒன்று சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தது. இந்த கருவி உருவாக்கப்பட்டால் 30 வினாடிகளில் கொரோனா தொற்றை கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share

Related posts

அமர்நாத் யாத்திரை ரத்து: ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

Admin

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு: 60 பேர் பலி

Admin

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

Admin

Leave a Comment