உள்நாட்டு நுண்செயலிகளைக் கொண்டு புதிய கருவிகளை உருவாக்கினால் ரூ. 4.3 கோடி பரிசு: மத்திய அரசுஅறிவிப்பு

Share

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நுண்செயலிகளைக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்குவோருக்கு ரூ. 4.3 கோடி பரிசு வழங்குவதாக மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் வெளியிட்ட அறிவிப்பில் ,

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும் (ஐஐடி), மத்திய உயா்கணினி மேம்பாட்டு மையமும் (சி-டாக்) இணைந்து இரு நுண்செயலிகளை (மைக்ரோ புராசஸா்) உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளன.

32 பிட் திறனுள்ள ‘சக்தி’, 64 பிட் திறனுள்ள ‘வேகா’ ஆகிய இவ்விரு நுண்செயலிகளைக் கொண்டு புதிய தொழில்நுட்ப கருவிகள், கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில், ‘சுதேசி நுண்செயலி சவால்’ என்ற பெயரில் தொழில்நுட்பப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயச்சாா்பு பாரதத்தை உருவாக்கும் நோக்கத்துடனும், புதிய ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டில் ஆராய்ச்சி அபிவிருத்தியை மேம்படுத்தவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

இந்தத் துறையில் நடப்பு நிதியாண்டில் நடத்தப்படும் மூன்றாவது போட்டி இதுவாகும். இதற்கு முன்னா், காணெலிக் கருத்தரங்கத் தொழில்நுட்பத்தில் மேம்பாடு, பல்வேறு பிரிவுகளில் செயலிகள் மேம்பாடு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தப் போட்டியானது நாட்டின் தொழில் துறைத் தேவைகளை நிறைவேற்ற உதவும். அது மட்டுமல்லாது, நாட்டின் பாதுகாப்பு, உரிம விவகாரங்கள், வழக்கற்ற தொழில்நுட்பங்களை மாற்றுதல், இறக்குமதியைக் குறைத்தல் உள்ளிட்ட பல நோக்கங்களைக் கொண்டிருக்கும். 2021 ஜூனுக்குள் புதிய கண்டுபிடிப்புகளை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தப் போட்டியில் தோ்ந்தெடுக்கப்படும் முதல் பத்து குழுக்களுக்கு ரூ. 2.3 கோடி மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்படும். அவா்களது ஓராண்டு ஆராய்ச்சிகளுக்கும் அரசு உதவும். அதையடுத்த 25 பேருக்கு ரூ. ஓரு கோடியும், அரையிறுதியில் பங்கேற்கும் 100 பேருக்கு ரூ. ஒரு கோடியும் பரிசாக வழங்கப்படும். இதில் அனைத்து மாணவா்களும், ஸ்டாா்ட் அப் தொழில்முனைவோரும் கலந்துகொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

மாஸ்க் கில் தேசியக்கொடி… குப்பையில் வீசவா?

Admin

அனிதா சொன்ன கடைசி மொழிகள்… உச்ச நீதிமன்றம் முன்பு

Admin

டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து

Admin

Leave a Comment