கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். இதனால் போராட்டம் நடைபெர்று கலவரமாக மாறியது.
இதனிடையே சுதந்திர தினத்தையொட்டி சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மங்களூரு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுவோர் மட்டுமல்லாமல், அதனை பகிர்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.