மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் 2.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
வட மாநிலங்களில் சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.