கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின், உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
77 வயதாகும் எடியூரப்பாவுக்கு நேற்று நள்ளிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்கடந்த 3 நாட்களில்,முதலமைச்சருடன் தொடர்பிலிருந்த அமைச்சர்கள், அதிகாரிகளும் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்