அஸ்ஸாம் மற்றும் பீகாரில் வெள்ளத்தால்கிட்டத்தட்ட 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பிரம்ம புத்திரா உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை தாண்டி பாய்வதால், 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 28 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி 96 பேரும், நிலச்சரிவு பாதிப்பால் 26 பேரும் உயிரிழந்திருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது.
மீட்கப்பட்ட மக்கள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர். வெள்ளத்தில் காசிரங்கா தேசியப் பூங்காவில் இதுவரை 125 விலங்குகள் பலியாகி உள்ளன. இதே போல்
பீகாரிலும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அருணாச்சலப் பிரதேசத்திலும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் இன்று முதல் வரும் 29 வரை மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது