முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை விவகாரத்தில் விசாரணையின் இறுதி அறிக்கைக்காக, ஆளுநர் காத்திருப்பதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரிய மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வில்விசாரணைக்கு வந்தது. வழக்கின் போது பேசிய நீதிபதிகள் பரோல் வழங்குவதில் கூட தகுந்த உத்தரவை பிறப்பிக்காத சிறை அதிகாரிகள் மீது ஏன் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் கும்பகர்ணன் போன்று அதிகாரிகள் தூங்கி கொண்டு இருக்கிறார்களா? என்றும் நீதிபதிகள் காட்டமாக கேட்டனர்.இது சம்மந்தமாக தமிழக சிறைத்துறை வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் நீதிபதிகள்,உத்தரவிட்டனர் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.