முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை ஒட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த நாள் வியாழனன்று கொண்டாடப்டுகிறது. காங்கிரஸ் கட்சியினர் இந்த நாளினை ‘சத்பவன திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை ஒட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவரது பிறந்தநாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு அஞ்சலிகள்’ என்று பதிவிட்டுள்ளார்.