கிராம சபை கூட்டங்கள் இந்த முறை தேவையில்லையா?

கிராம சபை
Share

ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மற்றும் உழைப்பாளர் தினம் ஆகிய நாட்களின்போது அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்தக் கிராம சபைக் கூட்டத்தின் மூலம், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், கிராமத்தின் நிர்வாக மற்றும் தொழில் வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல், பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் ஆகியவை ஊக்குவிக்கப்படும். இதனைச் செய்வதே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். 

இந்தியாவின் மிகச்சிறந்த உள்கட்டமைப்புக்கு காரணமான, பஞ்சாயத்து ராஜ் முறைமையின் அடிநாதமே, வளர்ச்சித்திட்டங்களை அடிப்படை மக்களின் கோரிக்கைகளிலிருந்து பெற்று செயல்படுத்துவதுதான். இதற்கு கிராம சபைக் கூட்டங்கள் அத்தியாவசியமானவை. 

ஆனால், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தத் தேவையில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, கிராம பஞ்சாயத்துகளில் கட்டாயம் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது என்பது கவனிக்கத்தக்கது. 


Share

Related posts

அனைத்து சாதி அர்ச்சகர்: 14 ஆண்டுகளாய் நீதி இல்லை

Admin

சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதல்: பொதுமக்கள் பாதிப்பு

Admin

கேல் ரத்னா விருது: மாரியப்பன் தங்கவேலு, மனிகா பாத்ரா, ரோஹித் சர்மா பெயர்கள் பரிந்துரை..

Admin

Leave a Comment