பிரதமர் நரேந்திர மோடி இன்று நொய்டா, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில் ‘உயர்-செயல்திறன்’ கோவிட் -19 சோதனை வசதிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கவுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் கருத்துப்படி, இந்த வசதிகள் நாட்டில் சோதனை திறனை அதிகரிக்கும் எனவும், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையை வலுப்படுத்த உதவும், தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த உதவும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த மூன்று உயர் செயல்திறன் சோதனை வசதிகள் நொய்டாவின் ஐ.சி.எம்.ஆர்-தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூலோபாய ரீதியாக அமைக்கப்பட்டுள்ளன.
ஐ.சி.எம்.ஆர்-மும்பை ஆரோக்கியத்திற்கான ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் கொல்கத்தாவின் ஐ.சி.எம்.ஆர்-தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனங்களில் அமைக்கப்டுகிறது.
மேலும் இதன் மூலம், ஒரு நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதிக்க முடியும் ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.