அங்கு உடல்நிலை குணமானதையடுத்து 14ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 3, 4 நாள்களாக உடல்சோர்வு, உடல்வலி இருப்பதாக அமித் ஷா தெரிவித்ததாகவும், இதையடுத்து அவருக்கு நடத்தபட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் கொரோனாவுக்கு பிந்தைய கவனிப்புக்காக (post covid care) எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் நன்றாக இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து பணியை தொடர்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது