இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவசரகால கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக இந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்க வங்கிகள் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம்.என்றும்,உடல் ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை குறைப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்யும். என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தெரிவித்தார்.